நூல் அறிமுகம்:
தீவிர இலக்கியம், சினிமா, அறியப்படாத மனிதர்கள் அல்லது அறிந்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்கள் என விரியும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல புதுவரவாக இருக்கும்.
தீவிர இலக்கியம் என்பதைப் போலவே தீவீர சினிமா என்று ஒன்று இருக்கிறது. அதன் கலை இலக்கியத் தன்மைகளை மேலோட்டமாகப் புரிந்து கொண்டுவிடவும் முடியாது.
ஒரு திரைப்படம் ஆன்மாவை தொன்மங்களை உட்செறிந்து படைக்கப்பட்டிருப்பது என்பதை தமிழ் சினிமாவில் மட்டுமே பழக்கப்படவர்களுக்கு முன்வைப்பது அவசியமானது.
[சினிமா ஒரு கலைப்பாடமாக வகுப்புகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூட எனக்கு தோன்றுவதுண்டு.] எது நல்ல சினிமா என்ற பார்வையை உருவாக்குவது, சினிமாவை வாழ்கையில் பிரிக்க முடியாத ஒரு முக்கியமான அங்கமாக வரித்துக்கொண்ட சமூகத்திற்கு அவசியமானது.
தீவிர சினிமா, அதன் படைப்பாளிகள் அந்தப் படைப்பை உருவாக்க அவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என ஒரு வகையிலும், ஜே.டி.சாலிங்கர், சார்லி சாப்ளின், அசோகமித்திரன், மா.அரங்கநாதன், கரிச்சான் குஞ்சு, கி.அ.சச்சிதானந்தம், வெ.ஸ்ரீராம், வெங்குட்டுவன், கமலதேவி என படைப்பாளிகள் அவர்களின் படைப்புகளின் நுட்பங்கள் என விரியும் இந்தப் புத்தகம் ஒரு பரந்துபட்ட பருந்துப் பார்வையை வாசிப்பவர்களுக்கு அளிக்கவல்லது.
நன்றி: எழுத்தாளர் வாசு முருகவேல்
******
நூல்: காகங்கள் கரையும் நிலவெளி
ஆசிரியர்: சரோ லாமா
வெளியீடு: வாசகசாலை
விலை: ₹200
நூலைப் பெற: 9790443979