நூல் அறிமுகம்:
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவன த்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது.
தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது.
முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.
மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல்.
மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.
2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
இந்த நாவல் குறித்து நாளிதழ்கள் வெளியிட்ட மதிப்பீட்டைப் பார்த்தாலே இந்த நூலின் கருத்தாக்கம் புரியும்.
*****
நீங்கள் படிக்கக்கூடிய மிகவும் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று. – தி ஹிந்து’
புலம்பெயர் மற்றும் அடிமைத்தனம் குறித்து மிக அருமையாக எழுதப்பட்ட வேதனை தரும் நாவல். – ‘மின்ட்’
உலகளவில் பொருத்தப்பாடு கொண்ட, மிக்க அழகுடனும் வலியுடனும் எழுதப்பட்ட நாவல். –
‘இண்டியன் எக்ஸ்ப்ரஸ்’
சுவாரசியமான கதை… புதிய திறப்புகளை உண்டாக்குகிறது. – ‘ஜடாலிய்யா’
மிகச் சிறந்த கல்ஃப் நாவல் என்று ஒன்று இருக்குமானால், பொருளாதார புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தைக் கருணையுடன் புரிந்துகொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் நாவலே முதலில் இருக்கும். ஆனால் இந்நாவல் அதைக் கடந்து மனிதனிலிருந்து விலங்கைப் பிரிப்பது எது என்றும் கேட்கிறது.
– நிலஞ்சனா ராய், ‘பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்’. இந்தியாவின் மிகச் சிறந்த இளம் எழுத்தாளர்களில் ஒருவர்.
******
குறிப்பு: ‘ஆடு ஜீவிதம்’ நாவலைத் தழுவி அதே பெயரில் அண்மையில் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
******
நூல்: ஆடு ஜீவிதம்
நூலாசிரியர்: பென்யாமின்
தமிழில்: விலாசினி
எதிர் வெளியீடு
விலை: ரூ. 285/-
aadu jeevitham book