ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.!

அந்த பாட்டுக்காகவே படம் ஹிட்டான சுவாரஸ்யம்

தமிழ் சினிமாவில் பாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். பல பேர் துன்பங்களிலிருந்து விடுபட அவர்களுக்கு பிடித்தமான பாடலைக் கேட்டு தான் அவர்களுடைய துன்பங்களை போக்கிக் கொள்கிறார்கள்.

இன்றளவும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் தான் பல பேருக்கு மருந்தாக பயன்பட்டு வருகின்றது.

இளையராஜாவுக்கு முன்பு வரை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் அமைந்த பாடலை தான் அந்த காலத்தில் அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து இவர் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.

இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிறகு தான் இசை என்றால் இவ்வளவு இனிமையாக இருக்குமா? என்ற ஒரு ஆச்சரியத்தை வரவழைத்தது.

இவர் இசையமைக்கும் வேகத்தை பார்த்து தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிசயத்து போனார்கள். இவருடன் சேர்ந்து இவருடைய நண்பர் ராமமூர்த்தியும் இணைய, தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டனர்.

இருவரும் சேர்ந்து எக்கச்சக்கமான வெற்றி பாடல்களைக் கொடுத்து வரும் நிலையில் இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்திற்கு மேல் பிரிவு ஏற்பட இருவரும் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினார்கள்.

அப்படி இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடலில் மாபெரும் வெற்றி பெற்ற பாடலாக அமைந்தது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் அமைந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற பாடல்.

இந்தப் படம் அந்த காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதுவும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படம் காதலின் ஆழத்தை மிகவும் வித்தியாசமாக காண்பித்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடலும் ஒருவகையில் காரணமாக அமைந்தன.

இந்த அளவுக்கு வெற்றி பெற காரணம் என்ன என்பது இப்போதுதான் தெரிகின்றது. இந்த ஒரு பாடலை இசை அமைக்க விஸ்வநாதன் ஆறு மாதம் காலம் எடுத்துக் கொண்டாராம்.

கிட்டத்தட்ட 250 டியூன்கள் போட்டும் ஸ்ரீதருக்கு எதிலுமே உடன்பாடு இல்லையாம். அதன் பிறகு தான் இந்த ஒரு டியூனில் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை பிரபல சினிமா பத்திரிகையாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

– நன்றி: முகநூல் பதிவு

ilayarajam_s_viswanathanmsvnenjam_marapathilaisridharஇளையராஜாஎம்_எஸ்_விஎம்_எஸ்_விஸ்வநாதன்நெஞ்சம்_மறப்பதில்லைமெல்லிசை_மன்னர்ராமமூர்த்திஸ்ரீதர்
Comments (0)
Add Comment