நூல் அறிமுகம்:
உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.
அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்களின் ‘பசி மொழி’யில், ஒரு மண்புற்று உருவாவது போல, கவிதைகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மறு பிறப்பெடுப்பவை.
இரண்டும் சேர்ந்த உரைநடை தமிழில் மிக அபூர்வம். கலாப்ரியா என்கிற கவிஞனின் இந்தக் கட்டுரைகளில் இவை அழகுறச் சாத்தியப்பட்டிருக்கின்றன. தமிழில் புதிய உரை நடையின் வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறவை கலாப்ரியாவின் இந்தக் கட்டுரைகள்.
****
நூல்: மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
ஆசிரியர்: கலாப்ரியா
சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்: 200
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் நூல் maiyathai-pirikira-neer-vattangal book review கலாப்ரியா kalapriya