இரண்டு வருடங்களுக்கு முன்பு அனில் பிரபாகர் என்கிற வன உயிர்ப் புகைப்படக் கலைஞர் இந்தோனேசியா காடுகளில் இருந்து எடுத்தப் புகைப்படத்தை CNN வெளியிட்டது.
அந்தப் புகைப்படத்தில், அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.
இந்தப் புகைப்படத்தை அப்புகைப்படக் கலைஞர் பதிவேற்றம் செய்யும்பொழுது தலைப்பை (Caption) இப்படிக் கொடுக்கிறார், “ஒரு சில நேரங்களில், மனித நேயத்தின் நோக்கம் இறக்கும்பொழுது, அந்நோக்கத்தை நோக்கி மிருகங்கள் நம்மை வழிநடத்துகிறது.”
இந்தப் புகைப்படம் நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறதல்லவா…?!!
– கலைப் பிரியன்
Photo Courtesy: Anil Prabhakar
Translation: Kalai Priyan
நன்றி: விவசாயம் முகநூல் பதிவு