தேர்வில் பெயில் ஆனவர்களைத் தேற்றுவது எப்படி?

- கண்ணதாசன்
“குழந்தைகள் 14 பேரையும் ஒரே ஸ்கூலில் தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார்.
1960-ல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு வருடம் ஒரு தம்பி பெயிலாகி விட்டான்.
அந்த வருடம் எல்லோருக்கும் 100 ரூபாய் கொடுத்தார்; பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார்.
நாங்கள் எல்லாம் எப்படி அது சரியாகும் என்று கேட்டோம்.
“சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும்.
ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்” என்றார்.
என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ புரியவில்லை; ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது.
பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்தத் தம்பி இன்று டாக்டராக இருக்கிறான்.”
– நன்றி: காந்தி கண்ணதாசன் பதிவு
#கண்ணதாசன் #kannadhasan 
kannadhasanகண்ணதாசன்
Comments (0)
Add Comment