கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒன்றிய அரசின் சார்பில் நாடு முழுவதும் 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் வெங்கையா நாயுடு, பாடகி உஷா உதூப், நடிகர் மிதுன் சக்ரவத்தி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் உட்பட 65 பிரபலங்களுக்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் விடுபட்ட நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கான பத்ம விருதுகளை டெல்லியில் உள்ள குடியரத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் மூத்த மகன் விஜயபிரபாகரனும் கலந்து கொண்டார்.
இந்த விருது பெற்றது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்துள்ள பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் இந்த பத்ம விருது சமர்ப்பணம் எனக் கூறியுள்ளார்.