12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.56% பேர் தேர்ச்சி!

மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத்தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பிவைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி  13-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை  

www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in

ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 97.45 சதவிகிதமும் அடுத்தபடியாகஈரோடு, சிவகங்கை மாவட்டங்களில் 97.42 சதவிகிதமும் மிகக் குறைந்தபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுTamil Nadu 12th ResultTN 12th Result 2024மாணவர்கள்மாணவிகள்
Comments (0)
Add Comment