கலைஞருக்குப் பிடித்ததும் பிடிக்காததும்!

கலைஞர் -100: நினைவுப் பதிவு - 1

செல்லப் பிராணிகள் முதல் கிரிக்கெட் வரை கருணாநிதியின் அறியப்படாத ரசனைகள் பல. அரசியல்வாதியாக நாடறிந்தவரின் பல முகங்கள் அறியப்படாமல் உள்ளன. அவற்றில் சில.

கலைஞருக்குப் பிடித்தவை பற்றி அவரே சொன்னவை:

அம்மா கையால் வைத்துக்கொடுக்கும் மீன் குழம்பு ரொம்பப் பிடிக்கும். இப்போது தாயுமில்லை, மீனுமில்லை என்கிறார்.

கிரிக்கெட் பார்க்கப் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் சௌரவ் கங்குலியின் ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பார்.

நாய் வளர்ப்பில் அலாதியான பிரியம் உண்டு. அல்சேஷன், பக் என பல இன நாய்களை வளர்த்துள்ளார்.

பேரன்களுடன் அளவளாவுவது பிடிக்கும். அவர்களின் உலகை அறிந்துகொள்ள நேரம் செலவிடுவார்.

சுற்றுப் பயணங்களின்போது பழைய நண்பர்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கப் பிடிக்கும்.

கலைஞருக்குப் பிடிக்காதவைகளின் பட்டியல்

எழுத்துப் பிழைகள் அவருக்கு துளியும் பிடிக்காது. முரசொலியில் சிறு பிழை கண்டால் கூட இதழ் பொறுப்பாளர்களைத் தொலைத்துவிடுவார்.

அதிகாரிகள் செய்யும் தவறுகள் கோபமூட்டும். உடனடியாக செல்பேசியில் அழைத்து கண்டிப்பார்.

மஞ்சள் துண்டு பற்றி கேள்வி கேட்பது பிடிக்காது. ஆனால், “அது ஒரு அடையாளம், அவ்வளவுதான்” என்பார்.

வாரிசு அரசியல் மற்றும் அரசியல்ரீதியான சமரசங்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் கேள்விகள். தவறான கருத்துக்கள் போன்றவை பிடிக்காதவை.

எந்தப் பத்திரிகையில், யார் கூறியிருந்தாலும் போன் போட்டு விளக்கமளிப்பார்.

– நன்றி: இந்தியா டுடே – 2008

Artist KarunanidhiIndia TodaySourav Gangulyஇந்தியா டுடேகலைஞர்கலைஞர் கருணாநிதிசௌரவ் கங்குலிமுரசொலி
Comments (0)
Add Comment