ஜானகி எம்.ஜி.ஆரை அரசு கொண்டாட வேண்டும்!

தூத்துக்குடி, கீழச்சண்முகபுரம் பிராப்பர் தெருவைச் சேர்ந்த மனிதநேய பண்பாளரும் எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளருமான சத்யா இலட்சுமணன் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-தேதியை அரசு விழாவாக அறிவிக்கவும், சட்டமன்றத்தில் அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கவும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநரகம் பதிலளித்துள்ளது. அதில், முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுதல் அரசின் கொள்கை முடிவாகும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவருக்கு அனுப்பியுள்ள பதிலில், முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவாகும் என்ற விபரமும், அன்னை ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்கும் தங்களது கோரிக்கை சட்டமன்றத்தைச் சார்ந்ததால், தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#எம்ஜிஆர் #அன்னை_ஜானகி_ராமச்சந்திரன் #mgr #janaki_ramachandren #annai_janaki 

annai janakijanaki ramachandrenMGRஅன்னை ஜானகி ராமச்சந்திரன்எம்.ஜி.ஆர்
Comments (0)
Add Comment