பாரதிதாசன் கவிதை வரிகளில் சில…
தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே… தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே.
பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத்தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
தமிழ் உயர்ந்தால், தமிழன் உயர்வான். தமிழ் தாழ்ந்தால், தமிழன் வீழ்வான்.
மழை என்பது இயற்கையின் கொடை. அது விரும்பி அழைத்தாலும் வராது; புலம்பிப் போவென்றாலும் போகாது.
தெய்வம் அறிவுக்கடலாக இருக்கிறது. அதில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திவலையாக இருக்கிறோம்.
சுயநலத்தை கைவிடு; உண்மையை மட்டுமே பேசு; நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.