சூரத் தொகுதியில் எப்படி ஜெயித்தார் பாஜக எம்.பி.?

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் வேட்பாளராக நிலேஷ் கும்பானி போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவில் முன்மொழிந்தவரின் கையெழுத்தில் முரண்பாடு என்று சொல்லி காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மாற்று வேட்பாளர் இருந்தார். அவரது மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார்கள். இன்னும் இரண்டு சிறிய கட்சிகளின் வேட்பாளர்களையும் வாபஸ் வாங்க வைத்தார்கள். 4 சுயேட்சைகளை வாபஸ் வாங்க வைத்தார்கள்.

பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. ‘சூரத் தொகுதி தாமரைக்கு முதல் பரிசு’ என்று குஜராத் மாநிலத் தலைவர் அறிவித்தார்.

அவ்வளவுதான், மோடி தேர்தல் முடிந்துவிட்டது!

இப்படி ஒரு அசாதாரண சூழல் என்றால் அதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்முறைகூட செய்யப்படவில்லை.

பா.ஜ.க. வேட்பாளரின் மனு தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடுவாரா?

டெல்லியில் உட்கார்ந்தபடியே தலையாட்டி விடுவாரா?

  • நன்றி : முரசொலி தலையங்கத்திலிருந்து… (25.04.24)

 

bjpcongressElection Commisionmodimukesh-dalalNilesh KumbhaniSurat Lok Sabha electionசூரத் தொகுதிதேர்தல் ஆணையம்நிலேஷ் கும்பானிபாஜகமுகேஷ்குமார்
Comments (0)
Add Comment