மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வெற்றி யாருக்கு?

தந்தி டிவி கருத்துக் கணிப்பு

மத்தியில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்கின்ற நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நேற்றைய பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி, “பாஜக அகில இந்திய அளவில் 150 தொகுதிகளைத் தாண்டாது” என்கிற விதத்தில் பேசியிருக்கிறார்.

இப்படி இந்திய அளவில் ஒவ்வொரு ஊடகத்திலும் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் என்கின்ற அடிக்குறிப்புடன் வெவ்வேறு வெற்றி வாய்ப்புகள் கணிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இதேபோன்ற கருத்துக் கணிப்புகளை வெவ்வேறு நிறுவனங்கள் நடத்தி இருக்கின்றன.

நேற்று தந்தி தொலைக்காட்சி தமிழகம் மற்றும் புதுவைக்கும் சேர்த்து 40 தொகுதிகளுக்கான தேர்தல் கருத்துக் கணிணப்பு முடிவுகளை வெளியிட்டது. 

அதில், தமிழகத்தில் போட்டியிடும் பல முக்கியமான விஐபி தொகுதிகள் குறித்தும் அலசப்பட்டன.

நிறைவாக திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுத்துச் சொன்னார்கள் நெறியாளர்கள்.

5 தொகுதிகளில் இழுபறி போட்டியிருக்கும் என்றவர்கள் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொன்னது ஒரே ஒரு தொகுதியை மட்டுமே.

அந்தத் தொகுதி புதுவைத் தொகுதி. இதைச் சொன்னவர்கள் நிறைவாக கடைசி இரண்டு நாள் நடக்கும் சில கவனிப்புகளால் முடிவுகளில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதையும் நாசூக்காகத் தெரிவித்தார்கள்.

ரயில்வே அட்டவணையில் முன்பு குறிப்பிடப்படுவதைப் போல தேர்தல் அட்டவணையும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதுதான் போலிருக்கிறது.

காங்கிரஸ்தமிழ்நாடுதிமுகபாஜகபுதுச்சேரிராகுல்காந்தி
Comments (0)
Add Comment