அருமை நிழல்:
கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிற சந்திரபாபு, “பம்பரக் கண்ணாலே” போன்ற ஜாலியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
“மனிதன் பிறக்கும் போதும் அழுகின்றான்”, “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” போன்ற தத்துவப் பாடல்களையும் சோகம் ததும்பப் பாடியிருக்கிறார்.
பாடல் ஒலிப்பதிவின் போது நடனம் ஆடியபடியே பாடுவது சந்திரபாபுவின் இயல்பு என்றிருக்கிறார்கள் அவருடைய பாடலை ஒலிப்பதிவு பண்ணியவர்கள்.
ஒருமுறை குடியரசுத் தலைவராக இருந்த தமிழரான ராதாகிருஷ்ணனுக்கு முன்னால் எம்.எஸ்.வி. ஆர்மோனியம் வாசிக்க, பாடலைப் பாடிய சந்திரபாபு குடியரசுத் தலைவரின் ரசனையைப் பார்த்து அவரது முகத்தைப் பிடித்துக் கொஞ்சியதை வியப்புடன் சொல்வார்கள்.
“பொறந்தாலும் பொம்பிளையாப் பிறக்கக் கூடாது” என்று பாடியிருக்கிற சந்திரபாபு கிடார் சகிதமாகப் பெண் வேடத்தில்!.