பாவங்களைப் போக்கும் நோன்பு!

நன்மைகள் தீமைகளை அழித்துவிடும் படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரையாகும்.

‘(திருக்குர்ஆன் 11:114) ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறு சிறு பாவங்கள், தவறுகள், சில நேரங்களில் பெரும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன.

‘ஆதமுடைய ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்பவர்கள்தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள், பாவமீட்சி தேடுபவர்களே! என நபி (ஸல்) கூறினார்கள்.

‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்!’ என நபி (ஸல்)கூறினார்கள்.

‘அவை எவை?’ என்று கேட்கப்பட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் ‘இறைவனுக்கு இணை வைப்பது, சூனியம் செய்வது, உரிமையின்றி உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது.

இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவைதான் பெரும் பாவங்கள்’ என்று கூறினார்கள்.

இது தவிர திருடுவது, கொள்ளையடிப்பது, பொது சொத்துக்களை மோசடி செய்வது, விபச்சாரம் புரிவது யாவும் பெரும் பாவங்களே.

ஒருவரிடம் ஏற்படும் சிறுபாவங்கள் யாவும் அவர் செய்யும் நல்லறங்களின் மூலம் அழிக்கப்படுகிறது.

‘லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன்பாவம் மன்னிக்கப்படுகிறது.

மேலும், ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

ஆபூ ‘ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவில் இருந்து மறு ஜூம்ஆ, ஒரு ரமலானில் இருந்து மறு ரமலான் ஆகியன அவற்றுக் கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் என நபி (ஸல்) கூறினார்கள்.

‘யாரேனும் என்னுடைய இந்த உளுவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுதால் அவர்முன் செய்த சிறுபாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என நபி (ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்:புகாரி)

‘நபி (ஸல்) அவர்களிடம் அராபா நாளின் நோன்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அது கடந்தாண்டு மற்றும் வருமாண்டு நிகழும் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என்றார்கள்.

‘(அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

இவ்வாறே பள்ளிவாசலை நோக்கி விரைவதும், தொழுகையை எதிர்பார்த்து இருப்பதும், ஐவேளைத் தொழுகைகளை பேணுதலாக தொழுவதும், ஹஜ் மற்றும் உம்ரா செய்வதும், தானதர்மம் செய்வதும், சாப்பிட்ட பிறகும், உடைமாற்றிய பிறகும் இறைவனை புகழ்வதும் ஆகிய செயல்பாடுகள் ஒரு மனிதனின் முன்செய்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு போதுமானதாகும்.

இவை சிறுபாவங்கள் புகழ்வதும் ஆகிய செயல்பாடுகள் ஒரு மனிதனின் முன்செய்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு போதுமானதாகும்.

இவை சிறுபாவங்கள் நீக்கப்படுவதற்கு பரிகாரமாகவும், நிவாரணமாகவும் அமைந்துவிடுகின்றன.

– நன்றி: மாலை மலர்.

11th Day of FastingBenefits of FastingDignity of FastingMagnificence of Ramadan FastingRamadan FestivalSpiritualityஆன்மிகம்ரமலான்வழிபாடு
Comments (0)
Add Comment