கால் நூற்றாண்டுக்கு முன்னர் டெல்டா பகுதியில் மயில் பார்க்க வேண்டுமெனில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவுக்குத்தான் செல்ல வேண்டும்.
என் சிறுவயதில் விராலிமலையில்தான் பார்க்க முடியும். அங்குத் தொழிற்பேட்டைகள் நெடுஞ்சாலைகள் என்று வந்த பிறகு மெல்ல அவை மேல தஞ்சைப் பகுதிக்குப் பரவின. பின் கீழத் தஞ்சையிலும் கடற்கரைப் பகுதி வரை பரவிவிட்டன. இன்று அவை இல்லாத ஊர்களே இல்லை.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வரை என் வீட்டருகே பகலில்கூட நரியைப் பார்க்கலாம். முதலில் சற்றுத் தொலைவிலிருந்த கோவில் காடு அழிக்கப்பட்டது.
பின்னர் ஓஎன்ஜிசி சாலை வந்தது. கரும்புத் தோட்டங்களும் காணாமல் போயின. விளைவு, நரிகளைக் காணோம். இது மயில்களின் இனப் பெருக்கத்துக்கும் வசதியாகிவிட்டது.
இன்று எங்கள் வீட்டுக் கொல்லையில் ஒன்பது மயில்கள் திரிகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று மயில்களே இருந்தன.
இன்னும் கொங்குப் பகுதியைப் போல டெல்டாவில் மனித – மயில் எதிர்கொள்ளல் தொடங்கவில்லை.
இப்போதைக்கு தேசியப் பறவை என்பதைவிட முருகனின் வாகனம் என்பதாலும் அழகிய பறவை என்கிற முன்னுரிமையிலும் அவற்றுக்கு சிக்கல் ஏதுமில்லை.
ஆனால், இரைக்கொல்லி இல்லாமல் அளவற்று பெருகிவிடும் எந்தவொரு உயிரினத்தும் எதிர்காலத்தில் சிக்கல்தான்.
- நன்றி: முகநூல் பதிவு