10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய 9.38 லட்சம் பேர்!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

தமிழத்தில் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முறைகேடுகளைத் தடுக்க 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வுகள் முடிந்து, ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என்றும் தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

10th public examஆசிரியர்கண்காணிப்பு குழுபள்ளிபொதுத் தேர்வுமாணவர்கள்மாவட்ட ஆட்சியர்முதன்மை கல்வி அலுவலர்வருவாய் துறை அதிகாரிவிடைத்தாள்
Comments (0)
Add Comment