இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவிடம், இளம் பெண் அதிகாரி ஒருவர், 2 மணி நேரத்தில் 3 பாடங்களை கற்றுக்கொண்டதாக வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு வைரலாகி உள்ளது.
மமாளர்த் என்ற நிறுவனத்தின் இணை நிறுவன அதிகாரியாக இருப்பவர் காஜல் அலக். சமீபத்தில் இவர், உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன், கபில் தேவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார்.
அருகில் உள்ள இருக்கையில் கபில்தேவ் அமர்ந்ததால் ஆச்சரியம் அடைந்த அவர், கபில்தேவுடன் பழகினார்.
அப்போது 2 மணி நேரப் பயணத்தில், வாழ்க்கையின் முக்கியமான 3 பாடங்களைக் கற்றுக்கொண்டதாக வலைத்தளப் பதிவில் கூறியுள்ளார்.
அந்த வெற்றி விதிகள்:
1. வெற்றிக்காக விளையாடாதீர்கள். ஆர்வத்திற்காக விளையாடுங்கள்.
2. உங்கள் குழந்தைகளின் குணத்தில் கவனம் செலுத்துங்கள். மதிப்பெண்களில் அல்ல.
3. சவால்களை ஒரு சாகசமாக கருதுங்கள். பிரச்சினைகளாக அல்ல.
– அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்தக் கருத்துக்கு பலரும் தங்கள் பதில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
– நன்றி: தினத்தந்தி