விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய லிவிங்ஸ்டன்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ பேர் சினிமாவிற்குள் வந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல பேரை இந்த சினிமா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இயக்குனராகும் ஆசையில் சினிமாவிற்குள் வந்தவர்தான் லிவிங்ஸ்டன். 

பாக்யராஜின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த லிவிங்ஸ்டன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில், ஸ்டேஷன் மாஸ்டராக நடிக்க வந்த நடிகரிடம், சில வசனங்களை சொல்லி பேச சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அந்த நடிகருக்கு வசனங்கள் சரியாக உச்சரிக்கவே வரவில்லையாம்.

நேரம் ஆவதையும் தான் போராடிக் கொண்டிருப்பதை பார்த்த பாக்கியராஜ் நீயே கோட் மாட்டிக்கிட்டு அந்த சீனை நடிச்சிடு, இன்னைக்கு நிறைய சீன் எடுக்கணும், இந்த ஒரு சீனிலேயே டைம் வேஸ்ட் பண்ண முடியாது என பட்டென சொல்ல அப்படித்தான் சினிமாவில் நடிகராக 1982-ம் ஆண்டு அறிமுகமானார் லிவிங்ஸ்டன்.

அதன்பின் பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மூலம் முதன் முதலில் நடிகராக அறிமுகமானார்.

ந்தப் படத்தில் தனது வில்லத்தனத்தால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனவர் திடீரென சுந்தர புருஷன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார்.

ஆரம்பத்தில் எல்லோரையும் போல பல விமர்சனத்திற்கு ஆளானார் லிவிங்ஸ்டன். இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்றெல்லாம் கமெண்ட்கள் வந்தன.

இருந்தாலும் தொடர்ந்து விடாமல் படங்களில் ஹீரோவாக நடித்து அந்த படங்களின் மூலமாகவே சரியான பதிலடியை கொடுத்தார் லிவிங்ஸ்டன். அதுவும் சாதாரண படங்கள் அல்ல. 100 நாள் ஓடி சாதனை படைத்த படங்களாகவே அமைந்தன.

அந்த வகையில் சொல்லாமலே திரைப்படம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இவருக்குள்ளும் இப்படி ஒரு நடிகரா என மெய்சிலிர்க்க வைத்தார். படம் முழுக்க வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

சுந்தரபுருஷன் திரைப்படம்தான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம். அந்த படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி 100 நாளுக்கு மேல் ஓடச் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக்கினார்.

அடுத்ததாக விரலுக்கேத்த வீக்கம் என்ற ஒரு குடும்பப்பாங்கான நகைச்சுவை படத்தில் நடித்து அதுவும் படையப்பா படத்தோடு போட்டி போட்ட படமாகவும் அமைந்தது. படையப்பா படத்தை விட வசூல் சாதனையை பெறும் படமாக இந்தப் படம் அமையப்போகிறது என அந்த நேரத்தில் செய்திகள் வந்ததாம். இருந்தாலும் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருக்கிறது.

அடுத்ததாக என் புருஷன் குழந்தை மாதிரி என்ற திரைப்படமும் 100 நாள் ஓடி சாதனை படைத்த படமாகவே அமைந்தது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக தேவயாணி நடித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் தன் படத்தின் மூலமாக தான் யார் என்பதை நிரூபித்தவர் லிவிங்ஸ்டன்.

தான் ஹீரோவானது பற்றி பேசிய அவர், “ஒருமுறை நான், விஜயகாந்த் சார் மற்றும் இன்னும் மூன்று பேர் ரயிலில் சென்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது நான் ஹீரோவாக ஆசைப்படுவதாக கூறினேன். அப்பொழுது அங்கிருந்த மூன்று பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

உடனே விஜயகாந்த் சார் அவர்களை முறைத்து இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என தீட்டினார். அப்பொழுது எனக்குள் நான் ஹீரோவாக வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. அதன் பிறகே கடின உழைப்பால் கடவுள் அருளால் ஹீரோவானேன்” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment