எழுத்தாளர் இந்திரன்
ஜெர்மனியில் 1818-ல் பிறந்து 1883-ல் லண்டனில் மறைந்த கார்ல் மார்க்ஸ் எனும் உலக சிந்தனையை மாற்றிய மாபெரும் சக்தி, நிஜ வாழ்க்கையில் வறுமையில் உழன்றது என்பது உண்மையே.
பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளில் கிடைத்த சொற்ப சன்மானத்தில் வாழ்க்கையை ஓட்டினார் மார்க்ஸ்.
மார்க்ஸ் அவரது காதல் மனைவி ஜென்னி இருவரிடமும் இரண்டு பென்னி கூட கையில் இல்லை. கடன்காரர்கள் தொல்லை கழுத்தை இறுக்கியது.
இத்தகைய நிலையில்தான் அவர் உலகின் உழைக்கும் வர்க்கத்துக்காக தன் உடல், பொருள், ஆவியைப் பணயம் வைத்து புத்தகம் எழுதினார்.
‘கடவுள் ஒரு சோளக்கொல்லை பொம்மை’ போன்ற துணிச்சலும் கவித்துவமுமான வாசகங்களை எழுதினார்.
பொருளாதார மேதை, தத்துவ ஞானி, புரட்சிகர பத்திரிகையாளரான கார்ல் மார்க்ஸ், ஃபிடரிக் ஏங்கல்ஸ் எனும் தொழிலதிபரின் பண உதவிகளை எதிர்நோக்கித்தான் வாழ வேண்டி இருந்தது.
1849-லிருந்து கார்ல் மார்க்சும் அவரது குடும்பமும் லண்டனில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டி இருந்தது.
150 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ‘தாஸ் காப்பிடல்’ (மூலதனம்) நூலின் முதல் பகுதியை ஆங்கிலத்தில் மார்க்ஸ் எழுதி முடித்தபோது, அதை எழுதியபோது மார்க்ஸ் புகைத்த சிகரெட் செலவைக்கூட அவர் சமாளிக்க முடியாமல் திண்டாடினார்.
2200 பக்கங்கள் கொண்ட தனது நூல் உலகத்தில் அதிகம் விற்கும் புத்தகமாகும் என்று அவர் கனவுகூட காணவில்லை.
உலக மனிதனை நோக்கி எழுதப்பட்ட ஒரு புத்தகம் என்ற யுனெஸ்கோவின் பெரும்புகழ் இந்நூலுக்கு இன்றைக்குக் கொடுக்கிறது.
#ஜெர்மனி #ஜென்னி #கடவுள்_ஒரு_சோளக்கொல்லை_பொம்மை #காரல்_மார்க்ஸ் #ஃபிடரிக்_ஏங்கல்ஸ் #யுனெஸ்கோ #கார்ல்_மார்க்ஸ் #karl_marx #jermany #jenny #kadavul_oru_solakkollai_bommai #marx