திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ஜெனிஃபர் லேமுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-க்கான ஆஸ்கர் விருது ‘காட்சில்லா மைனஸ் ஒன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ராபர்ட் டெளனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது. இதுவரை 3 முறை ஆஸ்கர் இறுதி பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட ராபர்ட், தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை ‘தி சோன் ஆஃப் இண்ட்ரஸ்ட்’படம் வென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது ‘புவர் திங்க்ஸ்’ படத்திற்காக ஹாலி வாடிங்டனுக்கு வழங்கப்பட்டது
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது ‘புவர் திங்க்ஸ்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது ‘புவர் திங்க்ஸ்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது ‘அனாடமி ஆஃப் அ ஃபால்’ திரைப்படத்திற்காக ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது ஹயாவோ மியாசாகி இயக்கிய ‘The Boy and the Heron’ திரைப்படம் வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘War Is Over! Inspired by the Music of John & Yoko’ குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ‘தி ஹோல்டோவர்ஸ்’ திரைப்படத்திற்காக டாவின் ஜாய் ராண்டால்ப்-க்கு வழங்கப்பட்டது.
#oppenheimer_wins_oscar #ஓப்பன்_ஹெய்மர் #ஆஸ்கர் #ராபர்ட்_டவ்னி #ஜெனிஃபர்_லேமு #காட்சில்லா_மைனஸ்_ஒன் #தி_சோன்ஆஃப்_இண்ட்ரஸ்ட் #புவர்_திங்க்ஸ் #Oscar #Robert_Downey #Jennifer_Lemu #The_Zone_of_Intrust #oppenheimer