நூல் அறிமுகம்:
கற்பதால் மட்டுமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கல்வி அறிவுடைவர்களுக்கே முகத்திலிருப்பன கண்கள், கல்லாதாருக்கோ அவை புண்கள் என உரைப்பார் வள்ளுவர்.
நல்ல நூல் படிக்கப் படிக்க புதிய புதிய சிந்தனைகளை நல்கும் அதுபோல நல்ல பண்புடையவர்கள் பழகப் பழக இன்பம் தருவர் என்றும் உரைக்கிறார்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – 391
என்ற குறளில், கற்க என்ற சொல்லை அறிதல் என்றும், கசடறக் கற்க என்ற சொல்லை தெரிதல் என்றும் கற்பவை என்ற சொல்லை தெளிதல் என்றும் நிற்க அதற்குத் தக என்பதை, அறிந்து நிற்க! தெரிந்து நிற்க! தெளிந்து நிற்க! சூழலுக்குத் தக நிற்க! என்றும் பொருள் கொள்ளமுடிகிறது.
இக்குறள் வழி, இந்நூல், அறிதல், தெரிதல், தெளிதல், நிற்றல் என நான்கு நிலைகளில் கல்வி குறித்த பல்வேறு சிந்தனைகளை நல்குகிறது.
அறிதல் என்ற நிலையில், சங்ககாலக் கல்வியின் இயல்பு, திண்ணைக் கல்வியின் நிலை, மெக்காலே கல்வி ஏற்படுத்திய தாக்கம், லிங்கன் கூறும் வாழ்க்கைக் கல்வி, என கல்வியின் பன்முகத் தன்மையை உரைக்கிறது.
புரிதல் என்ற நிலையில் நூல் வாசிப்பு, நூல்களின் பெருமை உள்ளிட்ட கட்டுரைகள் அமைகின்றன.
தெளிதல் என்ற நிலையில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமைகள், கல்வி உளவியல் ஆகிய கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன.
நிற்க அதற்குத் தக என்ற சொற்படி, தாளில்லாக் கல்வி, செயற்கை நுண்ணறிவுத் திறன், எனது தமிழாசிரியர்கள், நான் ஒருகண்ணாடி ஆகிய கட்டுரைகள் அமைகின்றன.
நிறைவாக, நிற்க அதற்குத் தக என்ற கட்டுரை இந்நான்கு கோட்பாடுகளையும் நுட்பமாக விளக்குவதுடன் திருக்குறள் கற்பித்தல் வழிகளை எடுத்துரைக்கிறது.
நூல்: நிற்க அதற்குத் தக
ஆசிரியர்: முனைவா் இரா.குணசீலன்
பக்கங்கள்: 146
விலை: 99/-
கிண்டில் பதிப்பகம்
#முனைவா்_இரா_குணசீலன் #நிற்க_அதற்குத்_தக_நூல் #nirka_adharku_thaga_book #கிண்டில்_பதிப்பகம் #Dr_R_Gunaseelan