வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையைப் பேசும் வடக்கன்!

வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை வசனமும் எழுதியவர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.

இயக்குநர் சுசீந்திரனுடன் தொடர்ந்து பயணித்து வரும் பாஸ்கர் சக்தி, தற்போது இயக்கியுள்ள படம் ‘வடக்கன்’.

டிஸ்கவரி சினிமாஸ் சார்பில், மூ.வேடியப்பன் தயாரிப்பில் இந்த வடக்கன் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய கதையை நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக இயக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வடமாநில தொழிலாளர்களின் வருகையை மையமாக வைத்து உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் முதல்பார்வையை இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர் நாசர், இயக்குநர்கள் லிங்குசாமி மற்றும் சீனுராமசாமி ஆகியோர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டனர்.

ஒரு திரைப்படமாக மட்டுமல்லாது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் ரீதியாகவும் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது வடக்கன்.

Comments (0)
Add Comment