கல்கி : 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் கதை!

தெலுங்கு டைரக்டர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’.

’பான்’ இந்தியா படமாக பெரும் பொருள் செலவில் உருவாகியுள்ள  ‘கல்கி’யில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட  பலரும்  நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், அறிவியல் புனைவு (சயின்ஸ் பிக்‌ஷன்) திரைப்படமாகும்.

இந்த படத்தின்  அறிமுக வீடியோ வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதன் கதையைக் கசிய விட்டுள்ளார், இயக்குநர் நாக் அஸ்வின்.

“கல்கி 2898 ஏடி’ படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 2898-ம் ஆண்டு முடிகிறது. எனவே தான் படத்துக்கு அந்த டைட்டிலை வைத்தேன். 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது, இந்தப்படம்.

மகாபாரத காலத்தில் உலகம் எப்படி இருந்தது? 2898-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம்.

முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே படம் தயராகியுள்ளது. காரணம், இது முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்கும் கதை’’ என்று தெரிவித்தார், நாக் அஸ்வின்.

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் மே மாதம் 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘கல்கி 2898’

கமல்ஹாசன், மகாபாரத காலத்தில் வருகிறாரா? அடுத்த நூற்றாண்டுகளில் வருகிறாரா? அல்லது இரு காலங்களிலும் வருகிறாரா? என ஆவலோடு காத்திருக்கிறார்கள், ரசிகர்கள்.

  • பாப்பாங்குளம் பாரதி.
Comments (0)
Add Comment