‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேயின் நினைவு தினம் இன்று.
யார் இந்த தாதா சாகேப்? அவரது பெயரில் திரைத்துறையின் உயரிய விருது வழங்கப்படுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு 1913-ம் ஆண்டு இந்திய நாட்டின் முதல் திரைப்படம் வெளிவந்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய ’ராஜா ஹரிச்சந்திரா’ என்கிற இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் தாதா சாகேப் பால்கே.
வெளிநாட்டிற்கு போய் அங்கு எப்படி படம் தயாரிக்கிறார்கள், அதற்கான உபகரணங்கள் என்ன என்பதை பார்த்துக் கொண்டு, பின் இந்தியா வந்து முதல் திரைப்படத்தை எடுத்து திரையிட்டார்.
இந்த படத்தில் ஆடியோ வராது அடுத்த காட்சிக்கான புரிதலை ஒரு கார்டில் போட்டு வைத்திருப்பார்கள்.
’ராஜா ஹரிச்சந்திரா’ என்கிற இந்த திரைப்படம் முதன் முதலில் மும்பையில் திரையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 95 திரைப்படங்களை இயக்கியுள்ளார் தாதா சாகேப் பால்கே.
இதன் மூலம் இந்திய திரைதுறைக்கு அவர் அடித்தளமிட்டார். இதனால் தான் தாதா சாகேப்பை இந்தியத் திரை உலகின் தந்தை என அழைக்கின்றனர். அதோடு மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை தாதா சாகேப் பெயரில் விருது கொடுக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, மூத்த பாலிவுட் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.
தாதா சாகேப் பால்கே பெயரில் இதுவரை 53 முறை விருது வழங்கப்பட்டுள்ளது. இது திரைத்துறையினருக்கான மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.
இந்த விருதுடன் ஒரு தங்கத் தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.
இதுவரை இந்த விருது தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 7 தமிழ்