சேரன் வெற்றிக் கொடி ஏற்ற காரணமாக இருந்த முரளி!

முரளியை ஓர் நடிகராக மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் போல பல இயக்குநர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி அவர்களை முன்னனி இயக்குநர்களாக்கிய பெருமை முரளிக்கு உண்டு.

மணிரத்னம், விக்ரமன், சேரன், கதிர் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர். முரளியின் தந்தை கன்னட சினிமா தயாரிப்பாளர் என்றாலும் முரளி தன் திறமையால் தமிழ் சினிமாவில் நுழைந்து பல ஹிட் படங்களில் நடித்தார். அப்படி இவர் சேரன் இயக்கத்தில் நடித்த படம் தான் வெற்றிக்கொடி கட்டு.

பாரதி கண்ணம்மா, பொற்காலம் என தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படங்களை இயக்கிய சேரன் அடுத்ததாக தேசிய கீதம் என்னும் படத்தை இயக்கினார்.

ஆனால் படம் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. இதனால், அடுத்து படங்களை இயக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார்.

தேசிய கீதம் படத்திற்குப் பின் கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக வீட்டில் முடங்கியவரை மீண்டும் சினிமாவிற்கு இழுத்து வந்தவர் முரளி.

முரளி குறித்து பேசிய சேரன், “முரளி போன்ற நல்ல மனிதர்களைப் பார்க்க முடியாது. தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிடாத இரக்க குணம் அவருக்கு உண்டு.

நான் இந்த நிலைமையில் இருந்தபோது என்னைச் சந்தித்து மீண்டும் வாருங்கள் ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார்.

அப்போது சிவசக்தி பாண்டியனிடம் அழைத்துச் சென்ற முரளி அவரிடம் நிலைமையை விளக்கி பின் அடுத்த படம் இயக்குவதற்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தார்.

அதன்பின்னர் முரளி என்னிடம் நானும் பார்த்திபனும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்க, பார்த்திபனும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அப்போது பார்த்திபன் தனக்குரிய பாணியில் ‘நானும் முரளியும் சேரனும்‘ என்று கூறினார்.

அதன்பின் என்னுடைய கடந்த இரண்டு படங்களில் வடிவேலுவின் காமெடி ஒர்க்அவுட் ஆக இதிலும் அவர் உள்ளே வந்தார்.

சிங்கிள் ஹீரோவை வைத்துப் படம் எடுத்த எனக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சவாலாக இருந்தது.

அதன்பின் 15 வெற்றிக்கொடி கட்டு படத்தின் திரைக்கதை உருவானது. இப்படி மூவரும் சேர்ந்ததால் தான் வெற்றிக் கொடிகட்டு படம் ஹிட் படமாக அமைந்தது“ என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment