அன்பும்.. கண்ணீரும்…!

பிப்ரவரி மாதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினமும் காதல் ஜோடிகளும் தான். இதுமட்டுமின்றி ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே, டெடி டே என ஒரு வாரத்திற்கு முன்பாகவே விமர்சியாகக் கொண்டாடப்படும் நாட்களும் உள்ளன.

இது குறித்து சொல்லப்படும் புராண கதைகளும் சுவாரசியமானவை. இது ஒரு மேலை நாட்டுக் கலாச்சாரமாக கருதப்பட்டாலும் இந்தியாவிலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால், 2019, பிப்ரவரி 14 ம் தேதி, இந்தியாவில் இந்த நாள் கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக பிப்ரவரி 14 மாறியது.

அன்றைய நாளில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் 100 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதி ஒருவன் மோதியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் ஈ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தற்கொலைப்படையாக மாறிய பயங்கரவாதி, புல்வாமாவில் உள்ள காகப்போராவைச் சேர்ந்த அகமது என்பதையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர்.

இந்தத் தாக்குதல் நடந்து ஆறாவது ஆண்டு நினைவுநாளில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அனைவரும் மரியாதை செலுத்துவோம். அன்பைப் பரிமாறும் இந்த நாளில்  வீரர்களின் சுய தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.

– சங்கீதா

Comments (0)
Add Comment