தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
பவானி சங்கர் மற்றும் தங்கம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த சத்யப்ரியா பவானி சங்கர் (1989 டிசம்பர் 31), தொடக்கத்தில் இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.
புதிய தலைமுறையில் செய்தி தொகுப்பாளராகப் பணிபுரிவதை விட்டுவிட்டு ஸ்டார் விஜய்யில் 2014-ம் ஆண்டு ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.
அதன் பின், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் சீசன் 5, சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தோன்றினார். அதோடு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான பிலிம்பேர் அவார்ட்ஸ் சவுத் (2015) நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
அதன்பிறகு தான் ரத்னகுமாரின் இயக்கத்தில், வைபவ் நாயனாக நடிந்த ’மேயாத மான்’ படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தார். இது ஒரு முழுநீளக் காதல், நகைச்சுவை படமாக அமைந்தது.
இதேபோல் 2018-ல் பாண்டிராஜின் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ப்ரியா பவானி சங்கர்.
அதைத் தொடர்ந்து மான்ஸ்டர் (2019), மாஃபியா: அத்தியாயம் 1 (2020), களத்தில் சந்திப்போம் (2021), கசட தபற (2021), ஓ மணப்பெண்ணே! (2021), இரத்தப் பணம் (2021), தங்கும் விடுதி (2022), யானை (2022), குருதி ஆட்டம் (2022), திருச்சிற்றம்பலம் (2022), அகிலன் (2022), பொம்மை (2022), ருத்ரன் (2022), பத்து தாலா (2022)போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது டிமான்ட்டி காலனி-2 மற்றும் இந்தியன்-2 படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட படங்கள் வைரலாகப் பரவி வருகிறது.
– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.