ரஜினியின் இளைய மகள் இயக்கும் புதிய படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் குடும்பம் போன்றே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் கலைத்துறையில் கால் பதித்தவர்கள்.

சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி உச்சத்தில் இருக்கிறார்.
அவரது மனைவி லதா அற்புதமான பாடகி.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘டிக்..டிக்..டிக்.’ படத்தில் இடம் பெற்ற ’நேற்று இந்த நேரம்’ எனும் பாடலை லதா பாடி இருந்தார்.

ஏற்கனவே இயக்குநராக அறியப்பட்ட ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நாளை ரிலீஸ் ஆகும் ‘லால்சலாம்’ படத்தை இயக்கியுள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தில் இடம் பெற்ற 2 நிமிடக் காட்சியை நீக்கியுள்ள தணிக்கைக் குழு, ’லால் சலாம்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, ஏற்கனவே கோச்சடையான் மற்றும் விஐபி (வேலையில்லா பட்டதாரி) படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சவுந்தர்யா மீண்டும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜிவி பிரகாஷ்குமாரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

கலைப்புலி எஸ் தாணு இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment