விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டும் இஸ்ரோ!

ககன்யான் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குள் 2 பேரை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கூறியுள்ளர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதனையடுத்து அப்பள்ளியின் ஓவிய ஆசிரியை ஒருவர், நிஹார் ஷாஜியை ஓவியமாக வரைந்து பரிசளித்தார். முன்னதாக நிஹார் ஷாஜிக்கு பாடம் எடுத்த ஆசிரியர் அவரைப் பாராட்டி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிஹார் ஷாஜி, “இஸ்ரோ பணி செய்வதை நிறுத்தாது. அடுத்தடுத்ததாக சந்திராயன் திட்டங்கள்உள்ளன. அடுத்ததாக ககன்யான் ஸ்பேஸ் ஸ்டேசன் அமைப்பது, அடுத்த கோள்களுக்கு செல்வது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன.

வானிலை குறித்த இந்தியன் மெட்ரலாஜிக்கலுக்காக தனியாக 2 சாட்டிலைட்கள் அனுப்பபட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்தியன் மெட்டராலஜிக்கல் டிப்பார்ட்மண்ட்
தனியாக டேட்டாக்களை ஆய்வு செய்கிறது எல் 1 என்பது இமாஜினரி பிளானட். இரு
கோள்களுக்கு இடையேயான சிறிய கிராவிட்டி போர்ஸ் கண்டறிந்து செயல்படுவது எல் 1 பாயிண்ட் பூமியும் சூரியனையும் சரியாக சுழலும் புள்ளி என்பதால் அது சூரியனை 24/7 மறைக்காது.

தற்போது வரை டேட்டாக்கள் அனுப்பி வருகிறது. அதனை சரியாக காலிப்ரேசன் செய்து தரவேண்டும் என்பதால் காலிபரேசன் வேலைகள் நடக்கிறது. ககன்யான் திட்டத்தில் 4 வருடத்தில் 2 பேரை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் உள்ளது.

அப்ளிகேசன் ஓரியண்டட் விண்கலங்கள் தனியார் தரப்பில் செய்ய உள்ளனர். அதனால் நிறைய திட்டங்கள் உள்ளன. இப்போது இண்டர் நெட் துரூ சேட்டிலைட் பிளான் செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

#ஆதித்யா_எல்_1 #திட்ட_இயக்குநர்_நிஹார்_ஷாஜி #இஸ்ரோ# kaganyan_project #people #space #aditya_l1_project #director_niharshaji

Comments (0)
Add Comment