குறையுமா மலக்குழி மரணங்கள்?

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது.

இதனைத் தடுப்பதற்காக 1994-ம் ஆண்டு ’தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம்’ உருவாக்கப்பட்டது.

இதன்மூலம், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கவும், பின்னர், 2013-ல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது

குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய அளவில் 330 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய அளவில் உயிரிழப்புகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில்‌ 2016-2020 ஆண்டில்‌ கழிவுநீர்‌ / மலக்கழிவு அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்ட 55 பேர்‌ இறந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதனை தடுக்க தேசிய தூய்மைப் பணி தொழிலாளர்கள் ஆணையமும் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளன. ஆனால் மலக்குழி மரணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஏட்டில் உள்ள வழிமுறைகள் பயன்பாட்டிற்கு வந்தால்தான் இதுபோன்ற அவலங்கள் மறையும்.

– ஆர். மகேஷ்வரி, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரி.

Comments (0)
Add Comment