தொடங்கியது ஜாம்பவான்களின் படம்!

1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் இந்திய சினிமாவில் இன்றளவும் பேசப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து வழங்கிய அற்புதப் படைப்பு அது.

‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம் ‘தக் லைஃப்’.

இதில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர்  நடிக்கின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதன் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், ’தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.

இதற்கான அப்டேட்டை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment