தமிழ் சினிமாவில் நடிகைகளின் வாழ்க்கை என்பது பெரும் போராட்டமானது தான். முன்னணியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு மார்க்கெட் போய் விடுகிறது.
கதாநாயகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகிகள் பிறகு அம்மாவாகவும், அக்காவாகவும் நடிக்க தொடங்குகிறார்கள். பலர் சினிமாவை விட்டு விலகியும் விடுகிறார்கள்.
ஆனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் நான் சினிமாவை விட்டு போக மாட்டேன் என்று உறுதியோடு இருக்கும் நடிகைகள் ஒரு சிலர்தான். அவர்களில் ஒருவர்தான் நடிகை ஊர்வசி.
இவர் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
80, 90-களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் இருந்து வருகிறார். ஊர்வசி சீரியஸாக வசனங்கள் பேசினா கூட அவர் பேசும் விதத்தைப் பார்த்து பலர் சிரித்த காலங்கள் உண்டு.
அப்பவே அப்படி என்றால் இப்போ கேட்கவே வேண்டாம். இவருடைய அல்டிமேட் காமெடி, தனித்துவமான முக எக்ஸ்பிரஷன் பலருக்கும் பிடித்தது தான்.
அதுவும் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலரும் பாராட்டியதில் ஒன்று.
அதுமட்டுமல்ல அம்மாவாக இருந்தாலும் பலருடைய மனம் கவர்ந்த குறும்புக்கார அம்மாவாக ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் ஒரு மெச்சூரிட்டி இல்லாத அம்மாவாக இருந்து பலரையும் சிரிக்க வைத்திருந்தார்.
அந்த வகையில் பல திரைப்படங்களை இவருடைய நடிப்பிற்கு உதாரணமாக கூறிக் கொண்டே போகலாம்.
இந்த அளவிற்கு ஊர்வசி எல்லாருக்கும் பிரபலமாக இருக்கும் நிலையில் இவருடைய நிஜப்பெயர் கவிதா ரஞ்சனி தான். ஆனா அது யாருக்கும் தெரியாது.
ஆரம்பத்துல ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
அதுவும் 10 வயதில் ‘கதிர் மண்டபம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை ஜெயபாரதியின் மகளாக நடித்திருக்கிறார்.
அப்பவே தொடங்கிய இவருடைய பயணம் இப்ப வரை நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இவரை முதன்முதலாக தமிழில் அறிமுகமாக்குனது பாக்யராஜ் தான்.
அவர் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்திற்காக ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த ஊர்வசியிடம் பேசி இருக்கிறார்கள். அப்போ அவர் மூணு படத்துல ஏற்கனவே நடிச்சிட்டு இருந்ததுனால என்னால நடிக்க முடியாதுன்னு சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் ஒரு வழியா பேசி எடுத்து கே. பாக்யராஜ் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசியை ஒப்பந்தம் பண்ணி இருக்கிறார்.
அந்த நேரத்துல இவர் ஏற்கனவே நடிச்சிட்டு இருந்த மூணு திரைப்பட டைரக்டர்களும் இந்த திரைப்படத்தை சீக்கிரமா முடிச்சா தான் நம்ம படம் முடிக்க முடியும்னு பாக்யராஜுக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் கதைப்படி ஊரில் சேட்டை செய்து கொண்டு குழந்தைத்தனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஊர்வசி பாக்யராஜை பார்த்ததும் அவரை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு பல திட்டம் போட்டு கடைசியா பொய் சத்தியம் செஞ்சு, அவரை கல்யாணமும் பண்ணிக்குவாங்க.
கல்யாணம் பண்ணினாலும் அந்த குழந்தை தன்னுடைய குழந்தை தான் என ஊர்வசி வளர்த்துட்டு இருப்பாங்க.
பாக்யராஜ் தன்னை சந்தேகப்பட்டதனால எனக்கு இனி குழந்தையே பெத்துக்க வேண்டாம் என்று குடும்பக் கட்டுப்பாடும் பண்ணிட்டு அந்த குழந்தையே போதும் என்று ஊர்வசி செய்த செயலைப் பார்த்து பாக்கியராஜ் மனமும் கடைசியில் மாறிடும்.
ஆனால் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ஊர்வசியே ஒரு குழந்தை நட்சத்திரமாக தான் இருந்திருக்கிறார்.
– நன்றி: ஒன் இந்தியா இதழ்.