பிரதமர் மோடி புகழாரம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது.
அதன்பின்னர் அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி உயிரூட்டப்பட்டது. ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார்.
இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். காலச் சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கோயில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம். ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சட்டப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ஒட்டுமொத்த தேசமே ராமர் கோயில் திறப்பை தீபாவளி போன்று கொண்டாடுகிறது.
ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன். ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது என்றார்.