மூன்றரை மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட உத்தமபுத்திரன் படத்தில் விக்ரமபாண்டியன், சொக்கநாத பாண்டியன் என பியூ சின்னப்பா 2 வேடங்களில் நடித்திருந்தார்.
தமிழ் க்ளாசிக் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். – சிவாஜி. இவரும் தனித்தனியாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் கூண்டுக்கிளி என்ற ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்திருந்தனர்.
அதே சமயம் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் ஒரே டைட்டில் ஒரே கதையில் நடிக்க இருப்பதாக தனித்தனியான விளம்பரம் கொடுத்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.
கடந்த 1940-ம் ஆண்டு பியூ சின்னப்பா நடிப்பில் வெளியான படம் உத்தமபுத்திரன். டி.ஆர்.சுந்தரம் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட உத்தமபுத்திரன் படத்தில் விக்ரமபாண்டியன், சொக்கநாத பாண்டியன் என பியூ சின்னப்பா 2 வேடங்களில் நடித்திருந்தார்.
18 வருடங்களுக்கு பிறகு இந்த படம் ரீமேக் செய்ய முடிவு செய்த எம்.ஜி.ஆர் உத்தமபுத்திரன் படத்தில் தான் நடிக்க இருப்பதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தார்.
அதே நாளில் உத்தமபுத்திரன் ரீமேக் உரிமையை வாங்கிய வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் உத்தமபுத்திரன் படத்தை சிவாஜி நடிப்பில் ரீமேக் செய்ய இருப்பதாக மற்றொரு பேப்பரில் விளம்பரம் அளித்திருந்தார்.
இந்த இரு விளம்பரங்களும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பின்னாளில், எம்.ஜி.ஆர் அந்த தலைப்பில் நடிப்பதை தவிர்த்துக் கொண்டதையடுத்து உத்தமபுத்திரன் ரீமேக்கில் சிவாஜி நடித்திருந்தார்.
அதன்பிறகு உத்தமபுத்திரன் படத்திற்கு இணையாக ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர் அடுத்த சில நாட்களில் நாடோடி மன்னன் என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
சிவாஜி 2 வேடங்களில் நடித்திருந்த உத்தமபுத்திரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தை சிவாஜி தனது சொந்த நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் மூலம் வெளியிட்டதால் அவருக்கு அதிகமாக லாபம் கிடைத்ததாகவும் தகவல் உள்ளது.
அதே போல் 1958-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தானே இயக்கி தயாரித்து நடித்த நாடோடி மன்னன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தில் மார்த்தாண்டன், வீரங்கன் என 2 வேடங்களில் நடித்திருந்தார்.
இதில் சிவாஜி நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படம் பின்னாளில் வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்ற காமெடி படமாக வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
– நன்றி: முகநூல் பதிவு