சமூகநீதியின் அடையாளம் தான் அம்பேத்கர் சிலை!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

125 அடி உயரம் கொண்ட இந்த சிலை 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

இந்த சிலைக்காக சுமார் 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த மைதானத்தில் மினி திரையரங்கம், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அம்பேத்கர் சிலை, இந்தியாவின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகக் கருதப்படுகிறது.

உலகின் இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை, அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, உலகின் உயரமான 50 சிலைகள் பட்டியலிலும் விஜயவாடா அம்பேத்கர் சிலை இடம்பெற்றுள்ளது.

இந்த சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

அதன்பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, சமத்துவம் மற்றும் சமூக நீதியின் அடையாளம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment