நாம் அனைவரும் ஒரு விதத்தில் சுயநலவாதிகளே!

படித்ததில் ரசித்தது:

– ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘ஒரே ஒரு புரட்சி’ புத்தகத்திலிருந்து.

******

அறிந்தோ, அறியாமலோ நாம் அனைவரும் முற்றிலும் சுயநலவாதிகள்.

நாம் விரும்புவதைப் பெற்றுக் கொண்டிருக்கும்வரை அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கருதுகிறோம்.

ஆனால் இதையெல்லாம் சிதைக்கும் ஒரு நிகழ்வு நடக்கும் தருணத்தில், நாம் விரக்தியில் அழுகிறோம்; வேறு வகை வசதிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஆனால் அவையும் நிச்சயமாக மீண்டும் சிதைந்துவிடும்.

எனவே இந்த செயல்முறை தொடர்கிறது. நீங்கள் அதில் சிக்கிக் கொள்ள விரும்பினால் – அதன் அனைத்து தாக்கங்களையும் நன்கு அறிந்த பின்னும் – தொடருங்கள்.

ஆனால், அதிலுள்ள அபத்தத்தை நீங்கள் கண்டால், நீங்கள் இயற்கையாகவே அழுகையை நிறுத்துவீர்கள்; உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை நிறுத்துவீர்கள்.

பிறகு, புதிய ஒளியுடன், உங்கள் முகத்தில் புன்னகையுடன் இந்த சமூகத்துடன் வாழ்வீர்கள்.

Comments (0)
Add Comment