பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்:
🍁’செயலாளர்’ என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்?
உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?
🍁 சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம்,
பிரபுக்களின் பட்டுத்துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.
🍁 ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கற்பூரம் வாங்கிக் கொளுத்துவதை விட ஆரஞ்சு பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். அப்படிக் கூறக்கூடாதா? அல்லது கூறுவது குற்றமா?
🍁 அறிவுப் பண்ணைக்கு பணியாற்ற முன்வருபவர்களை நாடு வரவேற்பதில்லை.
நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது, எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.
🍁 சனாதனச் சேற்றைவிட்டு நம் மக்கள் இன்னமும் வெளியேறாதது மட்டுமல்ல. பலருக்கு அந்தச் சேறு சந்தனமாகத் தெரிகிறதே. அதை எண்ணும்போதுதான் துக்கம் மட்டுமல்ல, வெட்கமும் நமக்கு உண்டாகிறது.
நன்றி:- பேரறிஞர் அண்ணா மன்றம்.