– ஆய்வாளர் சுபாஷினி
கடந்த 15 நாட்களாக பிலிப்பைன்ஸ், மலேசியாவின் சில மாநிலங்கள், தாய்லாந்து என பயணம் செய்துவிட்டு இன்று காலை சென்னை மாநகரம் வந்தடைந்தேன்.
இந்த நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அபரிதமான வளர்ச்சி சென்னை வந்தடையும் போது இன்னும் தமிழ்நாட்டில் சீரிய மேம்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன என்று பேஸ்புக் குறிப்பில் எழுதியுள்ளார் சர்வதேச தமிழ் ஆய்வாளர் சுபாஷினி.
பெரிய நகரங்களில் சாலைகளும் சாலை ஓரப்பகுதிகளும் இந்த கிழக்காசிய நாடுகளில் செம்மையாக அமைந்துள்ளன.
வாகன ஓட்டிகள் சாலை கோடுகளுக்குள் மிகுந்த கட்டுப்பாடுடன் தங்கள் கடமையை உணர்ந்து பயணிக்கின்றனர்.
பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளைத் தூக்கி வீசுவதில்லை; காரித் துப்புவதில்லை; சாலை ஓரங்களில் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதில்லை.
ஏனைய ஒவ்வொரு கிழக்காசிய நாடுகள் தங்களை நாகரீகத்தில் மேம்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்பது துல்லியமாக வெளிப்படுகிறது.
நாட்டின் மேம்பாடு என்பது அரசின் கைகளில் மட்டுமில்லை; தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தனி நபரின் உள்ளத்திலும் அது ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்.
நாட்டின் தூய்மையும் சாலையின் ஒழுங்கும் சாலை மேம்பாடுகளும் தனிநபர் செயல்பாடுகளினால் ஒழுங்குபெற முடியும்.
நான் ஏன் செய்யவேண்டும்? பிறர் செய்வதில்லையே என வாதிட்டுக்கொண்டிருந்தால் எந்த மேம்பாட்டையும் நாம் எத்தனை காலமானாலும் காண முடியாது. எட்ட முடியாது என்பது உறுதி.