நூல் அறிமுகம்:
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற தாமஸ் அல்வா எடிசன், கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறக்கூடியவர்.
இந்த உலகத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரைக் குறிப்பிடலாம்.
அவர்களுள் தாமஸ் அல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன், அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் என உழைப்பால் உயர்ந்தவர்கள் குறித்து தன் நூலில் விவரித்துள்ளார் நூலின் ஆசிரியர் வி.எஸ்.ரோமா.
முற்போக்கு எழுத்தாளரான வி.எஸ்.ரோமா கதை, கவிதை, கட்டுரை, நாவல் பொன்மொழி, நாடகம் உள்பட பல நூல்களை எழுதி விருதுகள் பல பெற்றுள்ளார்.
தன் எழுத்து குறித்து பேசியுள்ள வி.எஸ்.ரோமா,
“எழுதுவேன்.
என் எழுத்து
என் மூச்சுள்ள வரை,
என் வாசிப்பே
என் சுவாசிப்பு,
என்றும்
எழுதிக் கொண்டிருக்கவே
என் ஆசை”
நான் திருமணமே செய்து கொள்ளாத பெண்மணி என்பதில் எனக்கு மகிழ்வே.
என் எழுத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் என் பெற்றோர்களே.
நான் ரோமா ரேடியோ என்ற பெயரில் எஃப் எம் ஆரம்பித்து என் எழுத்துகளை அந்த வானொலி மூலம் ஒலிபரப்பி வருகிறேன்.
இதன்மூலம் பெண்களைப் பெரிதாக நினைத்துப் பெரும் மகிழ்ச்சியடைந்து
பெருமைப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்” எனக் கூறியுள்ளார்.
நூல்: உழைப்பே உயர்வு
ஆசிரியர்: வி.எஸ்.ரோமா
கிண்டில் பதிப்பு.
விலை: 99/-