மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!

நூல் அறிமுகம்:

மனிதர்கள் மனிதத்தன்மையோடு வாழும்போதுதான் மனிதம் புனிதம் பெறும் என்பதை விளக்கும்விதமாக, இந்நூலில் அடங்கியுள்ள 21 கட்டுரைகளும் உள்ளன.

தனிமனிதன் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரைகளும், புறநிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன.

பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் அநாதை இல்லங்களிலும் தள்ளிவிடாமல் பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும்.

பிள்ளைகளைச் சார்ந்திருக்காமல் வாழ பெற்றோர் முதலில் இருந்தே சேமிக்கத் தொடங்க வேண்டும்.

அவ்வாறு சேமித்தவற்றில் தங்களுக்குத் தேவையானது போக, மிச்சத்தைத்தான் பிள்ளைகளுக்குத் தர வேண்டும்.

முதியோர்கள் விட்டுக் கொடுத்து வாழப் பழக வேண்டும் என முதியோர் தொடர்பான பல ஆலோசனைகளும், கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

சுயநலனை அறவே விட்டொழித்து, தேச நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்கள், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் செயல்பட வேண்டும்.

வணிகநோக்கமில்லாமல், ஏழை, பணக்காரர்பாகுபாடின்றி மருத்துவம் எல்லாருக்கும் சம அளவில் கிடைக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடர்களை கடுமையான சட்டங்களின் அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயத்தை ஒவ்வொருவரும் ஆழ்மனதில் விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என வாழ்வதற்கான வழிமுறைகளை இந்நூல் மிகச் சிறப்பாக விளக்குகிறது.

****

நூல்: மனிதம் புனிதம்
ஆசிரியர்: நா.பெருமாள்
பதிப்பகம்: ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 208
விலை: ரூ.150/-

– நன்றி:  தினமணி 

Comments (0)
Add Comment