“உன்னை அவ்வளவு வெறுக்கும் மனிதனிடம்
உன்னால் எப்படி
சிரித்துப் பேச முடிகிறது?”
என்று கேட்டாள் வியப்புடன்
எனக்கு பெருந்தன்மை என ஒன்றுமில்லை
சகிப்புத்தன்மை என ஏதுமில்லை
எனக்கு எல்லாமே மறந்துபோகிறது
ஒரு சிகரெட் பாக்கெட்டை
எங்கே வைத்தேன் எனத் தெரியாமல்
காலையிலிருந்து தேடுகிறேன்
அதை எப்படி மறந்துபோனேனோ
அவ்வாறுதான்
ஒரு மனிதன் என்மேல் கொண்ட
வெறுப்பையும் மறந்துபோகிறேன்.
– மனுஷ்ய புத்திரன்