– ஓசோவின் சிந்தனைகள்:
- மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும்.
- என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான் சரியான கேள்வி. எப்போதும் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.
- வாழ்க்கையில் முக்கியமான ஒரே விடயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து மட்டுமே.
- நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை.
உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். - இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது.
- அறிவாற்றல் என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். அறிவார்ந்தவராக இருப்பது போலியானது, இது ஒரு போலித்தனமான புத்திசாலித்தனம்.
- அது உண்மையானதல்ல ஏனெனில் அது உங்களுடையது அல்ல, அது கடன் வாங்கப்பட்டது. புத்திசாலித்தனம் என்பது உள் உணர்வின் வளர்ச்சி. அறிவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது தியானத்துடன் சம்பந்தப்பட்டது.
- நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ அல்லது சாமந்திப்பூவாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்.
- ஒருமுறை உங்கள் விழிப்புணர்வு ஒரு சுடராக மாறியவுடன், அது உங்கள் மனம் உருவாக்கிய சகல அடிமைத்தனங்களையும் எரித்துவிடும்.
- யாரும் உயர்ந்தவர்களும் இல்லை, யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை, ஆனால் யாரும் சமமானவர்களும் இல்லை. மக்கள் வெறுமனே தனித்துவமானவர்கள், ஒப்பிடமுடியாதவர்கள். நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.
- உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள், இல்லையெனில் நீங்கள் தங்களை தாங்களே அறியாத மற்றவர்களின் கருத்துக்களை சார்ந்திருக்க வேண்டும்.
- உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது; உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.
- உங்கள் நேர்மை, உங்கள் அன்பு, உங்கள் இரக்கம் உங்கள் உள்ளத்திலிருந்து வர வேண்டும், போதனைகள் மற்றும் வேதங்களிலிருந்து அல்ல. எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்கள், வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள், வாழ்க்கையே இறுதி இலக்கு.
- வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.
- யாரும் உங்களை துன்புறுத்தவோ மகிழ்விக்கவோ முடியாது, உங்கள் சொந்த முயற்சியால் தான் அதை அடைகிறீர்கள். இது புரியாதவரை நீங்கள் ஒரு அடிமை*.
- நீங்கள் ஏதாவது எதிர்மறையானதை கடந்துவர நேர்ந்தால் கூட அதில் எதையாவது நேர்மறையானதை காண முயற்சி செய்யுங்கள் . ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க முடியும். எதிர்மறையிலும் நேர்மறையானதை கண்டுபிடிக்கக் கூடிய தகுதி நீங்கள் பெற்றுவிட்டால் நீங்கள் சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள.
- முயன்று பாருங்கள். வாழ்வின் புது கண்ணோட்டத்தை முயற்சி செய்யுங்கள்.
நேர்மறையாளனாக இருங்கள், எதிர்மறையாளனாக இருக்க வேண்டாம்.
நீங்கள் எந்த உலகத்தை உருவாக்குகிறீர்களோ, அதில்தான் நீங்கள் இருப்பீர்கள்.
– *ஓசோ*