டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்ப் பண்பாடு எங்கே?

நேற்றைய தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமை பேசுகிறோம். சரி. ஆனால் அது இன்றைய நீயும் நானும் உருவாக்கியது அல்ல. மூதாதையர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த சொத்து. பாட்டன் சொத்திலேயே நீ வாழ்ந்துமுடித்துவிட்டால் போதுமா?

இன்றைய தமிழ்ப் பண்பாடு ஒன்றை நீ உருவாக்கினாயா? உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் சேர்த்துக் கேட்கிறேன்… உங்களது வாரிசுளுக்கு நீங்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போகும் தற்காலப் பண்பாடு எது?

டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றை நாளைய தமிழனுக்காக உருவாக்கிக் கொடுத்தாயா? சங்க இலக்கியத்தில் காணப்படாத அதைக் காட்டிலும் சிறந்த ஒரு ஒற்றை கவிதை வரியையாவது நீ எழுதினாயா? நமது சிற்பங்களுக்குச் சமதையான ஒரு நவீன சிற்பத்தையாவது நீ உருவாக்கினாயா? முரசு அஞ்சல் என்கிற ஒரு ஆப் உருவாக்கிய சிங்கப்பூரில் வாழும் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன் ஒரு தற்காலத் தமிழ்ப் பண்பாட்டை உருவாக்கி இருக்கிறார்.

இதுபோல தற்காலத் தமிழன் உருவாக்கிய நிஜமான பண்பாட்டுப் பங்களிப்புகள் எவை எவை என்று எனக்குச் சுட்டிக் காட்டுங்கள்.

வாருங்கள் நண்பர்களே இன்றைய நீயும் நானும் உருவாக்கிய பண்பாட்டுப் பங்களிப்புகளை நாம் கணக்கெடுப்போம். பட்டியலிட்டு நம்மை நாமே ஒரு சுய விமர்சனத்துக்கு உட்படுத்திக்கொள்வோம்.

– இந்திரன்

Comments (0)
Add Comment