‘சாணம்’ எறியாதீர்கள்!

எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களில் சாணியடித்து அசுத்தப்படுத்தும் முறையைக் கண்டித்து 1957 நவம்பரில் நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

அந்தச் சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

அதிலிருந்து சில வாசகங்கள்.

“விளம்பரச் சுவரொட்டிகளை ஆபாசப்படுத்துவது இப்போது மட்டுமல்ல; இதற்கு முன்பும் நான் நடித்த படங்களான ‘குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள்’ படங்களின் விளம்பரச் சுவரொட்டிகளில் எனது உருவப் படத்தின்மீது சாணம் எறிந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

எப்படியும் ரசிகர்களுக்கிடையே, எந்தப் பகுதியினராலும் போட்டி உணர்ச்சி வேண்டாம்.

– நன்றி புதிய பார்வை நவம்பர் 1, 2004.

Comments (0)
Add Comment