கணிதம் என்றாலே எல்லாருக்கும் கசப்பாய் இருக்கும் என்ற நிலையில், அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும் என தோன்ற வைக்கிறது இந்த கணிதத்தின் கதை நூல்.
இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, சமூக மனிதகுல வளர்ச்சியிலும் மக்களின் வாழ்க்கையிலும் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணிதமாக எண்கள் வளர்ந்த விதம், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் என பல விளக்கங்களைக் கொண்ட நூல் இது.
இவையெல்லாம் படித்த பின்னே கணிதம் என்றால் நமக்கு ஆகாது என சொல்ல இயலாது தானே.!
நூல்: கணிதத்தின் கதை
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம்
விலை: 105
பக்கங்கள்: 112