‘விடாமுயற்சி’க்காக எடை குறைத்த அஜித்!

துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், அல்டிமேட் ஸ்டார் அஜித்.

லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். அர்ஜுன், ப்ரியா பவானி ஷங்கர், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு கடந்த மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

பாதுகாப்பு பிரச்சினைக் காரணமாக திட்டமிட்டபடி வேகமாக ஷுட்டிங் நடத்த முடியவில்லை. முழுப்படத்தையும் அஜர்பைஜானில் நடத்த முடிவாகியுள்ளது.

இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சனிக்கிழமை மீண்டும் அஜர்பைஜானில் தொடங்க உள்ளது.

இதற்காக அஜித் ஏற்கனவே அங்குச் சென்று விட்டார். இந்தப் படத்துக்காக அஜித் 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment