பாரம்பரிய அடையாளமான பனை ஓலைக் கொழுக்கட்டை!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில் பனை ஓலைக் கொழுக்கட்டை செய்வார்கள். அரிசி மாவு, வெல்லம், வறுத்த பாசிப்பயறு போன்றவற்றை சேர்த்து மாவு போல் தயாரிப்பார்கள்.

முற்றாத இளம் பனை ஓலைக் குருத்துகளை நீளமாக வெட்டி சுத்தப்படுத்தி அவற்றில் இந்த மாவை வைத்து இரு முனைகளிலும் கட்டி வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வேக வைப்பார்கள்.

நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிட்டால் அற்புதமான சுவை கிடைக்கும். இதிலேயே வெல்லம் சேர்க்காமல் சர்க்கரையை சேர்த்து செய்பவர்களும் உண்டு.

பலரும் சென்னையை ஒட்டி குடியேறி விட்டதால் இந்த பழக்கம் சென்னையில் தொடர்கிறதா என தெரியவில்லை.

ஆனால், திருப்போரூரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய அய்யாகுட்டி நாடார் அவர்களின் மகனும் எனது நண்பருமான பாலமுருகன் பாரம்பரியத்தை மறக்காமல் மொத்த குடும்பத்தையும் அழைத்து இன்றும் பனை ஓலைக் கொழுக்கட்டை பாரம்பரியத்தை தொடர்ந்து செய்துவருகிறார்.

இந்த மாதிரி பதிவு போட்டால் இரண்டு கொழுக்கட்டை கூடுதலாக கொடுப்பார் என நம்புகிறேன்.

நன்றி: சரவணன் கார்த்திகேயன் ஃபேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment