ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்:

******

கேள்வி: உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்: ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.

இருக்க வேண்டியவை: அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, உழைப்பு, நேர்மை, முயற்சி, தன்னம்பிக்கை, தன் எழுத்தைத் தானே எழுதுதல், அறிந்தவற்றை மட்டுமே எழுதுதல்!

இருக்கக் கூடாதவை: நான்கு கதை எழுதிவிட்டு, தான் ஆன்டன் செக்காவ் தரத்துப் படைப்பாளி என்ற ஆணவம், குறுக்கு வழிகளில் தன்னை நிறுவ முயற்சித்தல், விமர்சனம் செய்பவனைக் குலப்பகையாகக் கருதுதல், தான் வாசிக்காதது எதுவும் இல்லை, தனக்குத் தெரியாததும் எதுவும் இல்லை எனும் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்தல், சாதனையாளர்களைப் பொருட்படுத்தாது இருத்தல், பரபரப்பில் புகழ்பெற எண்ணுதல்!”

Comments (0)
Add Comment