– எழுத்தாளர் இந்திரன்
பிளாஸ்டிக் பானைகளின் வரவு கிராமத்து குயவனின் கையிலிருந்து பானை வனையும் கலையைப் பிடுங்கிக் கொண்டது.
களிமண்ணைக் கையினால் பிசைந்து ஒன்றைப் படைக்கும் மகிழ்ச்சியை குயவனின் கையிலிருந்து பிடுங்கி விட்டது பிளாஸ்டிக் தொழில்நுட்பம்.
ஆனால், களிமண் கலைஞர்கள் சோர்ந்து விடவில்லை. களிமண் சிற்பங்கள், சுடுமண் முகமூடிகளைச் செய்வதின் மூலமாகத் தொழில்நுட்பத்துக்கு போட்டி கொடுக்கிறார்கள்.
அவர்களை வாழ வைக்கத்தான் வீடுகள் தோறும் இத்தகைய சுடுமண் கலை படைப்புகளை வாங்க வேண்டும்.
என் வீட்டுக்கு வருபவர்களை இந்தக் களிமண் முகமூடிதான் வரவேற்கிறது.
காரணம் கீழடி, மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலிருந்து சுடுமண் சிற்பக்கலை இன்று வரை வாழ்ந்து வருவதின் அடையாளம் இது.